Our Vision is based on Ephesians 6:10-18
ஏன் நாம் ஒரு குடும்பமாக நிற்க வேண்டும்?
நாம் ஒரே இரட்சகராலும், ஒரே இரத்தத்தினாலும் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால் நாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.
நாம் எதற்காக ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு போராட்டம் வம்சத்தோடும்
ரத்தத்தோடும் இருக்கிற மனிதர்களோடு அல்ல.
நமக்கு போராட்டம் துறைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின்
அதிகார லோகாதிபதிகளோடும், வளிமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின்
சேனைகளோடும் இருக்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு நாம் தயாராகும் விதமாக கட்சையை அறையில் கட்டினவர்களாக,
மார்கவசத்தை தரித்தவர்களாக,
பாதரட்சையை தொடுத்தவர்களாக,
விசுவாசம் என்னும் கேடகத்தை பிடித்துக் கொண்டு,
இரட்சணியம் என்னும் தலைச்சீராவால் தலையை பாதுகாத்துக் கொண்டு,
தேவ வசனம் ஆகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொண்டு
இந்தப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
நாம் போராடும் போது நமக்கு முன்னால் நிற்கிற சத்துருவை மேற்கொள்வது எளிதாக இருக்கும்.
ஆனால் நமக்கு பின்புறமாக வருகிற சத்துருவை எப்படி எதிர்கொள்வது?
இங்கேதான் Prayer Warrior குடும்பம் உருவாகிறது.
நாம் ஒவ்வொருவரும் முதுகுக்கு முதுகாக இணைந்து நின்று,
நான்கு பக்கங்களிலிருந்தும் வரும் சத்துருவின் சதி திட்டங்களை
முறியடித்து தேவன் நமக்காக வைத்திருக்கும் உன்னத திட்டங்களை
நிறைவேற்றுகிறவர்களாக இருப்போம்.
தேவனுடைய சித்தத்தை செய்து வாழ்ந்து,
"நல்ல போராட்டத்தை போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
இனி நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது"
என்ற நிச்சயத்தோடு நம்முடைய ஓட்டத்தை முடிக்க
தேவன் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென் 🙏